கட்டலோனிய தன்னாட்சி பிராந்தியத்தின் தீர்மானம் ஒத்திவைப்பு

329 0

ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக செல்லும் கட்டலோனிய தன்னாட்சி பிராந்தியத்தின் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிராந்தியத்தின் தலைவர் கார்லெஸ் பியுக்டெமொன்ட் இதனை அறிவித்துள்ளார்.

கட்டலோனியா மற்றும் ஏனைய பிராந்தியங்களின் தலைவர்கள் நேற்று ஸ்பெயினில் இருந்து பிரிந்துச் செல்வதற்கான சுதந்திர சாசனத்தில் கைச்சாத்திட்டனர்.

எனினும் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு இடமளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்

Leave a comment