தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.
முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இதனை தெரிவித்துள்ளார்.
உத்தேச புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் காணப்படும் பாரதூரமான விடயங்கள் தொடர்பில், இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

