சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் சந்திக்க தயாராகின்றார் கலகொடஅத்தே ஞானசார தேரர்

298 0

உத்தேச அரசியல் அமைப்பு சீர்த்திருத்த யோசனைக் குறித்து மகா நாயக்கர்களின் நிலைப்பாடு, சகல கட்சிகளின் மத்திய செயற்குழுவுக்கும் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுயலாப அரசியல் நோக்கிலேயே தற்போது புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு பணிகள் இடம்பெறுகின்றன.

30க்கும் அதிகமானவர்களுக்கு பிரதமராகும் கனவு இருக்கிறது.

இந்தநிலையில் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களையும், முஸ்லிம் தலைவர்களையும் சந்தித்து தாம் அரசியல் யாப்பு குறித்து கலந்துரையாடவிருப்பதாகவும் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.

Leave a comment