உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளது கோரிக்கை நியாயமானது

351 0

அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளது கோரிக்கை நியாயமானது என்றும், இந்த விடயத்தில் சட்ட மா அதிபர் திணைக்களம் நியாயமாக செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சிவில்சமுக அமைப்புகளின் மன்றம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்த தமிழ் சிவில் சமுக அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், குறித்த அரசியல் கைதிகளின் வழக்குகள் எந்த அடிப்படையில் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை , குறித்த 3 அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும், அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் அரசியல் கைதிகளின் விடுதலை என்ற விடயம், சட்ட ரீதியானது என்பதை கடந்து தற்போது நியாயத்தின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.

இந்தவிடயத்தில் அரசாங்கம் நியாயமான நடந்துக் கொள்ள வேண்டும்.

இதனை வலியுறுத்தி அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை மறுதினம் வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடகல்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment