இலங்கையில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலைகளால், நாட்டின் போட்டித்தன்மை மற்றும் ஆட்சி தொடர்பிலான முக்கியமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி தமது அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியானது இந்த வருடம் குறைவடையவுள்ளது.
அதேநேரம் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் 0.2 சதவீதத்தால் அதிகரித்து, 4.6 சதவீதமாக பதிவாகுமு; என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இலங்கைத்தீவு பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
இவை இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிலையியல் தன்மைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

