நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் இரேஸா சில்வா அபுதாபியில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இன்று கைதாகி இருந்தார்.
அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 500000 ரூபாய் ரொக்க பிணையிலும், 5 மில்லியன் பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்தது.
அத்துடன் அவர் நாட்டில் இருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தவழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என்று கூறப்படும் கவர்ஸ் கூட்டுறவு சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளராக இரேசா சில்வா செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

