அரசியல் கைதிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றம் 

2371 0

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 3 அரசியல் கைதிகளும் அனுராதபுரம் பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களின் உடல்நிலை கருதி, அங்கு மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தங்களின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்துக்கே மீண்டும் மாற்றுமாறு கோரி கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

எனினும் இந்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment