அரச சேவையாளர்கள் ஐந்து பேரில் ஒருவர் உளவியல் ரீதியான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புதிய ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலக உளவியல் சுகாதார தினமான இன்றைய தினம், அளுத்கமயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பணியிடத்திலும் குடும்பத்திலும் ஏற்படுகின்ற முரண்பாட்டு நிலைமைகளே, அரச சேவையாளர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்கு காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

