பல மில்லின் பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

390 0

ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் டுபாயில் இருந்து இலங்கை வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று சுங்க பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 505 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 43 வயதான குறித்த பெண், மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை பொதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment