உத்தேச தேர்தல் தொடர்பாக விசேட பயிற்சி

525 0

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உத்தேச தேர்தல் தொடர்பாக, விசேட பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஏனைய திணைக்கள பணியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர ஒன்றிற்கு மேற்பட்ட உறுப்புரிமை பிரிவுகளை சேர்ந்த வாக்காளர்களுக்கும் விசேட பயிற்சிக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உத்தேச தேர்தல்களில் ஒரு கோடியே 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளை சேர்ந்த 335 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தமது வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.

Leave a comment