முன்னாள் ஜனாதிபதிகாளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்விற்கும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

