ஹம்பாந்தோட்டையில் நேற்று முனதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிராயுதபாணி நபர்களை தாக்கியதன் மூலம், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

