முதலமைச்சர் வேட்பாளர்களுக்கான பனிப்போர் ஆரம்பம் !

570 0

வட­மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு  மாகா­ணங்­களில் எதிர்­வரும் தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா  சுதந்­தி­ர­க்கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளி­டையே பனிப்போர் ஆரம்­பித்­துள்­ள­தாக கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

மேற்­கு­றிப்­பிட்ட மூன்று மாகாண சபை­க­ளி­னதும்  முன்னாள் முத­ல­மைச்­சர்கள், அமைச்­சர்கள் மற்றும்  உறுப்­பி­னர்கள் அதே­போன்று தொகுதி மற்றும் மாவட்ட அமைப்­பா­ளர்கள், வர்த்­தக பிர­மு­கர்கள் என பலரும் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ரா­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­றான பனிப்­போ­ருக்கு மத்­தியில் கலைக்­கப்­பட்­டுள்ள மூன்று மாகாண சபை­களில் இரண்டில் முத­ல­மைச்­சர்­க­ளாக இருந்த ஸ்ரீலங்கா  சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை  முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் வாய்ப்பு கிடைக்­காது எனவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதி­ராக எதிர்­வரும் தேர்­தல்­களில் கள­மி­றங்­க­வுள்ள   ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யினர் குறித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை தம்வசம் இழுக்கும்  முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment