எல்லைதாண்டல் தொடர்பில் இந்திய அரசு, மீனவர்களிடையே செம்டெம்பரில் முக்கிய பேச்சு – அமைச்சர் மகிந்த அமரவீர –

332 0

mahintha-amaraweera-m.p-750x422வடபகு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு முயட்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் செம்டெம்பர் மாதம் இந்தியாவின் மத்திய மற்றும் தமிழ் நாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படவுள்ளது. மேலும் இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையும் நடாத்தப்படும் என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்hளர்.
யாழ்ப்பாணத்திற்க வருகைதந்த அமைச்சர் இங்குள்ள கடற்றொழிலார்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.
இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-
நான் பதிவி ஏற்ற பின்னர் முதலாவது விஜயத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டுது. அதன் போது விசேசமாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறல்களால் இங்குள்ள மீனவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் என்னிடத்தில் கூட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத:து கைப்பற்றிய இந்திய படகுகளையோ, அவர்களின் உபகரணங்களையோ விடுவிக்கப் போவதில்லை என்று நான் உறுதியளித்திருந்தேன். இது இன்றுவரைக்கும் நடமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
குறிப்பாக இதுவரையில் இடம்பெற்ற கைதுகளின் ஊடாக 130 ஆழ்கடல் படகுகளை கைப்பற்றியுள்ளோம். மேலும் தொகையான வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அனைத்தும் இங்கேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. எமக்கு இங்குள்ள மீனவர்களை பாதுகாப்பதே முக்கியமாகதாக இருக்கின்றது.
இங்குள்ள கடல் வளத்தினை இந்திய இழுவைப்படகுகள் வந்து கொண்டு செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது.
இந்த விடையம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் சம்மந்தப்பட்டுள்ளார்கள். ஆகவே தான் இந்திய மீனவர்களின் அத்துமீறல் விடயங்கள் தொடர்பாக கவனமாக கையாளுகின்றோம்.
நூங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சோரு இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம். தொடர்ந்தும் இந்தியாவின் மத்திய மற்றும் தமிழ் நாட்டு அமைச்சர்களுடனும் பேசவுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய மற்றும் இலங்கை மீனவர்களை ஒரே இடத்தில் அழைத்து பிரச்சினையை விரைவில் தீர்க்குமாறு என்னிடத்தில் பணித்துள்ளார். அதனை நான் விரைவில் நிறைவேற்றுவேன்.
எதிர்வரும் செம்டெம்பர் மாதம் இந்தியாவின் மத்திய மற்றும் தமிழ் நாட்டு அமைச்சர்களுடன் பேசவுள்ளோம். இதனைத் தொடர்ந்து. இந்திய மீனவர் குழு இலங்கைக்கு வந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.
இந்திய மீனவர்கள் அத்துமீறல்கள் பிரச்சினையை முழுமையக தீர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சரவையில் உள்ளவர்கள் தீர்மானித்துள்ளார்கள். இதன்படி இந்திய மீனவர்களி அத்துமீறல்களுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார்.