கடற்றொழில் அமைச்சர் பங்கேற்ற யாழ். கூட்டத்தில் கருத்து மோதல் -அமைச்சர் தலையிட்டு சமரசம் செய்தார்-

369 0

image5கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் வடக்கு, தெற்கு கடற்றொழிலாளர்களிடையே காரசார விவாதம் இடம்பெற்று குழப்ப நிலையொன்று உருவானது.
எனினும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு இரு குழப்ப நிலையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர,சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், பாhராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் கூரே,வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் தென்னிலங்கையைச் சேர்ந்தகடலுணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாரா நிறுவன அதிகாரிகள் மற்றும் அந்நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் டற்றொழிலாளர்களும் பங்கெற்றிருந்தனர்.
கலந்துரையாடலில் ஆரம்பத்திலேயே வட கடலில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் யாழ்.கடற்றொழிலாளர்கள் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து காரசாரமான கருத்துக்களையும் அமைச்சர் முன் தெரிவித்துள்ளனர்.
ஆனால் யாழ்.கடற்றொழிலாளர்களின் குற்றச்சாட்டுக்களை அங்கிருந்த தென்னிலங்கை நிறுவன அதிகாரிகள் மற்றும் அந்நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் கடற்றொழிலாளர்கள் மறுத்தனர். இதனையடுத்து இரு தரப்புக்களுக்கிடையிலும் காரசாரமான விவாதம் இடம்பெற்று கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர்கள் அதிகாரிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
தென்னிலங்கை மீனவர்களின் தொடர்ச்சியான ஆத்துமீறல்களால் எமது மீனவர்கள் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடலட்டை, சங்கு மற்றும் வர்ண மீன்களை பிடிப்பதற்கான அனுமதிகளை மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்று அதன்னிலங்கையில் இருந்து வருவோராலேயே அதிகம் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
மேலும் அத்துமீறி வரும் தென்னிலங்கை மீனவர்கள் இங்கு தங்கியிருந்து கடலட்டை பிடிக்கின்றார்கள். சுமார் 50 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் ஆழ்கடலில் செய்ய வேண்டிய தொழில்களை அவர்கள் கரையோரத்தில் செய்கின்றார்கள். இதனால் எனது மீனவர்களின் வலைகள் அறுத்துச் செல்லப்படுகின்றன.
மேலும் இரவு வேளைகளில் வெளிச்சத்துடன் சென்று நு+ற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கடலட்டை பிடிப்பதில் ஈடுபடுகின்றார்கள். இதனால் கரைக்கு மீன்கள் ஒதுங்குவது இல்லை.
அதேபோன்று தென்னிலங்கையில் இருந்து வருவோர் இங்கு தங்கியிருந்து தொழில் செய்வதற்கான அனுமதிகளும் இல்லை.
ஆனால் கடற்படையினர், இராணுவத்தினருடைய உதவிகளுடன் இங்கு தங்கி நின்று தொழிலில் ஈடுபடுகின்றார்கள் எனவும் யாழ்.கடற்றொழிலாளர்கள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.
எனவே எமது கடல் பிரதேசங்களிலும் கடலட்டை, சங்கு பிடிக்கும் தொழிலை முற்றுமுழுதாக தடைசெய்ய வேண்டும் எனவும் யாழ.;.கடற்றொழிலாளர்கள் ஒருமித்து கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையிலேயே அம்மண்டபத்தில் இருந்த நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் யாழ்.மீனவர்களின் கருத்துக்களை மறுதலித்து தமக்கான அனுமதி வழங்கப்பட்டுளள்து என்றும். சட்டவிதிமுறைப்படியே தாங்கள் தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.
அவர்களின் கருத்துக்கள் பொய் எனத் தெரிவித்து அதற்கு எதிராக யாழ்ப்பாண கடற்றொழிலாளர் கடுமையாக வாதிட்டனர்.
கடலட்டை தொழில் ஈடுபடும் நிறுவத்தினரை கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறும் அவர்கள் கோரினர்.
இதனையடுத்து இருதரப்புக்குமிடையில் குழப்ப நிலை உரவாகியது. பின்னர் அமைச்சர் மற்றும் அதிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.