வித்தியாவின் தாய் அச்சுறுத்தப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு

319 0

kayts-10வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டள்ள சந்தேக நபரின் தாயாரின் வழக்கு நாளை திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் இவ்வழக்கு விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன் போது குறித்த சந்தேக நபர் சார்பில் கடந்த வழக்குத் தவணையில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி இ.சபேசன் சமர்ப்பித்த பிணை வி;ண்ணப்பம் மீதான கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணைகளை பார்வையிடுவதற்கு வந்த வித்தியாவின் தாயார் கொலை சந்தேக நபர்களான சுவிஸ்குமார், உசாந்தன் ஆகியோரின் தாயார் இணைந்து அச்சுறுத்தியிருந்தனர்.
இது தொடர்பாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீதிமன்றத்தின் கவனத்திற்க கொண்டு சென்றதன் பினன்ர் அது தொடர்பா ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதன்படி சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்தனர். அவர்கள் தொடர்பான வழக்கினை விசாரித்த நீதவான் சாட்சியக் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதன்படி தொடர்ந்து வைத்திய வசதிகளுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ்குமாரின் தாயார் உடல் நலக்குறைவால் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிளந்திருந்தார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் வழக்கு விசாரணையில் வித்தியா கொலை குற்றவாளி உசாந்தனின் தாயார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.