மத பிரிவினையை கையிலேடுப்போமானால் நாம் இவ்வளவு காலமும் கொடுத்த விலைமத்திப்பில்லாத தியாகங்களுக்கு எப்பயனுமில்லை -அமைச்சர் பா.டெனிஸ்வரன்-

290 0

14102801_10210136236831552_678717803269213322_oமன்னார், நானாட்டான், முசலி பிரதேசங்களுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று 20.08.2016 காலை மோட்டைக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நானாட்டானில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.வசீகரன், ஐந்து மாவட்டங்களின் உதவி பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பா.டெனிஸ்வரன் விவசாய, கால்நடை உற்பத்திகள் மூலமே தற்பொழுது அதிக இலாபம் ஈட்டப்படுவதாகவும் இத்துவே சிறந்த வாழ்வாதாரமாக காணப்படுவதாகவும் தம்மால் வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளுக்கு தாம் இவ்வாறன திட்டங்களையே முன்னிலைப்படுத்துவதகவும் தெரிவித்ததோடு அச்செயற்திட்டங்களுக்கு தமக்கு உதவியாக இருக்கும் கால்நடை திணைக்கள அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது மத பிரிவினைவாதம் எம்மக்கள் மத்தியில் ஊடுருவுவதாகவும் இதனால் எமது இவ்வளவு வருடகால தியாகங்களும் பயனற்றதாகிவிடும் எனவும் இக்கொடிய பிரிவினைவாதத்தினை மக்கள் களையவேண்டும் என்றும் எமது நடவடிக்கைகள் மூலம் அயலவர் மற்றும் சகோதர மதத்தவர்கள் மனம் நோகாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் கால்நடை பண்ணையாளர்களுக்கு அவர்களின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கால்நடை வைத்திய முகாமும் நடைபெற்றது.