சம்பூரில் இன்னும் 600 வீடுகள் தேவை

286 0

download-31சம்பூரில் நலன்புரி முகாம்களில் வாழ்ந்த மக்களின் முகத்தில் தற்போது மகிழ்ச்சியைக் காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சம்பூர் பிரதேசத்தில் 600 வீடுகளாவது தேவையெனக் குறிப்பிட்ட அவர், நிரந்தர வீடுகள் இல்லாவிட்டாலும் தற்காலிக வீடுகளையாவது கட்டிக்கொடுக்க முன்வரவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சம்பூர் பிரதேசத்தில் கணவனை இழந்த 41 விதவைகளுக்கான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நேற்றைய தினம் 23 வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தற்காலிக வீடுகளையாவது கட்டிக் கொடுக்காவிட்டால் மக்கள் அவர்களுடைய வாழ்க்கையை நடத்துவது மிகவும் கஸ்டம் எனக் குறிப்பிட்ட அவர், நலன்புரி முகாம்களில் வாழ்ந்த போது, மிகவும் வேதனையுடன் மனவருத்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தமது தொழிலைச் செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான உதவிகள் செய்தும் பட்சத்தில் திறமானதொரு சமூகம் உருவாகுவதற்கு நிச்சயமாக வழி வகுக்கும் என்றும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.