அமல் சில்வா பிணையில் விடுவிப்பு

346 0

கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ரொக்க பிணைகள் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ரவைகள் 3இனை தன்னகத்தே வைத்திருந்த சம்பவம் தொடர்பில் நேற்று மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a comment