நாடெங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து களமிறங்கும்

249 0

உள்ளூராட்சி தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலக்ராஜ்இ வேலுகுமார்இ ஏ.அரவிந்தகுமார் மற்றும் சண். பிரபாகரன் ஆகியோர் அடங்குகின்றனர்.

நுவரேலியாஇ கண்டிஇ மாத்தளைஇ பதுளைஇ இரத்தினபுரிஇ கேகாலைஇ கொழும்புஇ கம்பஹாஇ களுத்துறைஇ புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் முக்கிய கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தகால தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்த ஒரு சில இடங்களில் அவர்களுக்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு உடன்படுவதுடன் ஏனைய தமிழ் பெரும்பான்மை வட்டாரங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களே போட்டியிடவேண்டும் என்பது தங்களின் உறுதியான நிலைப்பாடென அமைச்சர் மனோ கணேசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு சேர்ந்து போட்டியிடுவதில் உரிய புரிந்துணர்வு இல்லையெனில் நாடெங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து களமிறங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலத்தின் தேவை கருதி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டாக போட்டியிட்டாலும் அல்லது தனித்து போட்டியிட்டாலும் தங்கள் தனித்துவமான முறையிலேயே செயல்படும் எனவும் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment