அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான இலங்கையின் நாடாளுமன்றக் குழுவினர், அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி அவர்கள் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டனர்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவே அமெரிக்கா சென்றிருந்தது.
இதன்போது இரு நாட்டு உறவுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக வொசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது

