ஐக்கியம் என்ற சொற்பதத்திற்கு புதிய அரசியலமைப்பில் இடமில்லை – ஜனாதிபதி

405 0
ஐக்கியம் என்ற சொற்பதத்திற்கு புதிய அரசியலமைப்பில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற பௌத்த மத நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரவித்துள்ளார்.
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் பௌத்த மதம் தொடர்பான அத்தியாயத்தை நீக்குவது அல்லது அதனை மட்டுப்படுத்தும் அத்தியாயம் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பெரும்பாலான மஹாநாயக்கர்கள் இன்றைய பத்திரிகைகளில் தமது அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
பௌத்த மதத்துக்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் குறைக்கப்படுவதாக அந்த ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ணவிடம் தாம் வினவியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் வழங்கிய ஜயம்பதி விக்ரமரட்ண,
அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் குறித்து விவரிக்கும் ஆவணத்தில்கூட, பௌத்த மதத்தின் முன்னுரிமையை குறைக்கும் வகையிலான எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை என கூறியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், அரசியலமைப்பு தொடர்பில் மஹாநாயக்கர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உரிய முறையில் புரிந்துகொள்ளப்படாதவர்களால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கலாம் என ஜயம்பதி விக்ரமரட்ண குறிப்பிட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பில் பௌத்த மதம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகள், உட்பிரிவுகள் மற்றும் வாக்கியங்களில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்பதை தெளிவாக குறிப்பிடுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

Leave a comment