கல்கிஸ்ஸை ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – ஒருவர் கைது

54756 0

மியன்மார் ரோஹிங்யா அகதிகள் சிலர் தங்கியிருந்த கல்கிஸ்ஸை பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு அருகில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் 34 வயதான மொரட்டுவை – ராவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நாளை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Leave a comment