அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு எதிராக பேஸ்புக் பிரச்சாரமா? மறுத்த மார்க் ஸக்கர்பெர்க்

18895 0

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தனக்கு எதிராக செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவரது கருத்துக்களை பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க் மறுத்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையின் தலையீடு இருந்ததாக குற்றசாட்டு எழுந்தது. குறிப்பாக டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஹிலரி கிளிண்டன் உள்ளிட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறினர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது. அதிபர் தேர்தலின் போதும், அதற்கு பின்னரும் பேஸ்புக்கில் உள்ள விளம்பரங்களை ரஷ்ய நிறுவனங்கள் வாங்கியதாக பேஸ்புக் நம்புகிறது. மேலும், அதிபர் டிரம்ப்பின் பயணத்தடை உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்கு மார்க் ஸக்கர்பெர்க் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் தனக்கு எதிராக கூட்டாக பிரச்சாரம் மேற்கொள்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதே குற்றச்சாட்டை அவர் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நாளிதழ் ஆகியவற்றின் மீதும் வைத்திருந்தார்.

தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து சாட்சியமளிக்குமாறு பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய நிறுவனங்களை செனட் புலனாய்வுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அழைப்பானையை பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ள மேற்கண்ட நிறுவனங்கள் நேரில் சென்று சாட்சியமளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மார்க் ஸக்கர்பெர்க் சார்பில் பேஸ்புக் நிறுவனம் ஒரு பதிவை வெளியிட்டது. அதில்:- 

ஸக்கர்பெர்க் எல்லா கருத்துக்களுக்கும் ஒரு தளத்தை உருவாக்க முயன்றார். சில சிக்கலான விளம்பரங்களை தவிர்த்து பேஸ்புக் தளத்தின் தாக்கம் வேட்பாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ள, மில்லியன் கணக்கான மக்கள் வாக்களிக்க அவர்களுக்கு ஒரு குரலை கொடுக்கும்

அரசியல் அலைவரிசையின் இருபக்கத்திலும் விரும்பத்தகாத வகையில் இருந்த உள்ளடக்கத்தால் அவர் சோகமடைந்துள்ளார். சில தாரளாவாதிகள் டிரம்ப் வெற்றிக்காக மர்க் செயல்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் முடிவுகளை பேஸ்புக் மாற்றியது என்பது வேடிக்கையான ஒன்றாகத்தான் இருக்கும்.

பேஸ்புக் நிறுவனம் அனைத்து மக்களுக்குமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபடும். மேலும், தேர்தலுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பும் தேசிய அரசுகளுக்கு எதிராக பணியாற்றும் என மார்க் கூறியுள்ளார்.இவ்வாறு பேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment