வேட்பாளர்களை தெரிவு செய்ய ஐ.தே.க.17 வேட்பு மனு உருவாக்கம்-கபீர் ஹாசிம்

2303 197

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, ஐக்கிய தேசிய கட்சியால் 17 வேட்பு மனு சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்கள் தோறும் நேர்முக பரீட்சைகளை மேற்கொள்ளவே இவ்வாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனுக்களின் தெரிவுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment