வடமத்திய மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டாதாரிகளால் குழப்பநிலை…!!

401 0

வட மத்திய மாகாண சபைக்கு மாகாண சபை வாயில்கள் அனைத்தையும், மறித்து வேலையில்லாப் பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினால் குழப்ப நிலைமை தோன்றியிருத்தது.

மூன்று நாட்களாக வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலையில் இவ்வாறு குழப்பநிலைமை தோன்றிதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மாகாண சபைக்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

வடமத்திய மகாணத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வழங்கப்படுள்ள ஆசியர் நியமனத்தில் முறைகேடுகள் இருப்பதாத கூறியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்டுப்பட்டுள்ளது.

வடமத்திய மகானத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை கடந்த 3 நாட்களாக நடனத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலையில்லாப் பட்டதாரிகளை அனுராதபுரம் ‍பொலிஸார் தாக்கியத்தில் ஒருவர் அனுராதாபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமத்திக்கப்படுள்ளார்.

அத்துடன் மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருந்த போதிலும் ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெண் வேலையில்லாப் பட்டதாரிகளை மாணவிகளின் தரக்குறைவாக பேசியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலையில்லாப் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

1103 நியமனங்கள் வழங்குவதாக கூரி 470 பேருக்கு மட்டுமே அவசரமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய பட்டதாரிகள் நிராகரிக்கப்படுள்ளனர்.

உள்ளக ரீதியில் பல முறைகேடுகள் நடைபெற்று பட்டதாரி மாணவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

இது ஒரு அரசியல் பழிவாங்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

வடமத்திய மாகான ஆசியர் நியமனங்கள் வேறு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Leave a comment