ரோஹின்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் நாட்டில் கட்டவிழ்த்துவிப்படட்டுள்ள வன்முறைகளின் காரணமா இலங்கைக்கு சரணாகதியாக வந்த ஒருவரை,
பாலியல் இன்னல்களுக்கு உட்படுத்தியுள்ள குற்றச்சாட்டின் பேரில் மீரிஹான பொலிஸ் நிலையத்தின் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் கீர்த்தி தென்கோன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதியன்று இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில்.
மீரிஹான பொலிஸ் பிரிவிற்குபட்ட பிரதேசத்தில் இருக்கின்ற வெளிநாட்டவர்கள் தஞ்சம் புகுவதற்கான முகாமிலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நாட்களில் குறித்த முகாமிலிருந்த போது நோய்வாய்பட்டிருந்த காரணத்தினால் கழுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் முகாமுக்கும் அழைத்து வரப்பட்டபோதே மீரிஹான பொலிஸ் நிலையத்தில் நீண்டகாலம் சேவையாற்றிவந்த பொலிஸ் அதிகாரியொருவரினால் மேற்படி சரணாகதி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சரணாகதியானவர் வருடங்களுக்கு முன்பாக மியன்மாரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது அங்கிருந்து தப்பியோடி படகின் மூலம் இலங்கை்கு வந்துள்ளார்.
இவரை கடற்படையினர் மீட்டு மீரிஹான முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.
தற்போதும் இலங்கையில் காணப்படும் தடுப்பு முகாம்களில் பூஸ்ஸ தடுப்புமுகாம் மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாக காணப்படுகின்ற நிலையில் அங்கிருந்த சரணாகதிகள் விரையில் ஐக்கிய அமெரிக்கா அல்லது கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டியவர்கள்.

