கந்தளாய் சீனி தொழிற்சாலையின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்வதாக ஊழலுக்கு எதிராக குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து, அந்த அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு முதலீட்டு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டு 2 வருடங்கள் ஆகின்றன.
100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அரசு தமது முதலீட்டு பங்கினை வழங்கவில்லை.
இதன்காரணமாக முதலீட்டாளர்கள் தமது பங்கின் முதலீட்டை மேற்கொள்ளாது தொழிற்சாலையில் உள்ள இருப்பு, மின்பரிமாற்றி உள்ளிட்டவற்றை கொள்ளையிடுகின்றன.
அரசாங்கமும் உறுதுணையாக இருப்பதாகவும் வசந்த சமரங்க குற்றம் சுமத்தினார்.

