ரோஹிங்கிய அகதிகளுக்கு இலங்கை குடியுரிமையை வழங்க முடியாது – தயாசிறி

5502 48
ரோஹிங்கிய அகதிகளுக்கு இலங்கை குடியுரிமையை வழங்க முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனால், அவர்களை வேறு நாடொன்றுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் சட்டரீதியான நடவடிக்கைகள் முடிவடையும்வரை மட்டுமே, அவர்களை இலங்கையில் தங்க வைக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment