இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு சர்வதேசத்தின் உதவி குறைவின்றி கிடைகிறது – ஜனாதிபதி

2469 0
இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு சர்வதேச ரீதியாக அனைவருடைய உதவியும் குறைவின்றி கிடைத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி செயற்பாடுகளில் எவ்வித முறைகேடுகள் அல்லது மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
இன்று எவ்வித அரசியல் வேறுபாடுகளுமின்றி ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உலகின் அனைத்து நட்பு நாடுகளினதும் உதவியுடன்  நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை பின்னோக்கித் திருப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment