தேர்தல் ஆணைக்குழுவின் மறைமுக ஒத்துழைப்புடனேயே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளது!

750 0

தேர்தல் ஆணைக்குழுவின் மறைமுக ஒத்துழைப்புடனேயே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறதா என பார்த்திருக்காது, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், 2015ம் ஆண்டு ஜனாதிபதியால் தொகுதி நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான சந்தர்ப்பம் இருந்த போதும், எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவை காரணம் காட்டி தேர்தல் ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எல்லை நிர்ணய மேன்முறையீடு இருக்கும் போது தேர்தலை நடத்த முடியாது என்று சட்ட புத்தகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது இந்த கருத்தை ஏற்க மறுப்பின், பகிரங்க விவாதத்திற்கு வருமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு சவால் விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment