தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்க அரசு முடிவு

306 0

தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

குறித்த வைத்தியசாலைகளிலுள்ள வசதிகளை மேம்படுத்தல் மற்றும் அங்கு காணப்படும் நெருக்கடிகளைக் குறைத்தல் என்பனவே இதன் நோக்கம் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான ஆவணங்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், களுத்துறை மாவட்டத்திலுள்ள 14 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment