பேரறிவாளன் 27 நாளில் 1,657 பேருடன் சந்திப்பு : நாளை மறுநாள் பரோல் முடிவு

210 0

நீதிமன்ற அனுமதியுடன் பரோலில் வெளிவந்த நாளில் இருந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை நேற்று வரை, மொத்தம் 27 நாட்களில் 1,657 பேர் சந்தித்துள்ளனர். 

பரோல் காலம் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வேலூர் ஜெயிலில் இருந்து கடந்த மாதம் 24-ந் திகதி இரவு ஒரு மாத நீதிமன்ற அனுமதியுடன் விடுதலை செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கும் பேரறிவாளனை, அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினர் சந்தித்து வருகிறார்கள்.

அதன்படி, பரோலில் வெளிவந்த நாளில் இருந்து நேற்று வரை, மொத்தம் 27 நாட்களில் 1,657 பேர் பேரறிவாளனை சந்தித்துள்ளனர்.

பரோல் காலம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.

24-ந் திகதி மாலை 5 மணிக்குள், வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீண்டும் அடைக்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment