கொழும்பில் அரச கூட்டுத்தாபன வாகன தரிப்பிடத்தில் கைக்குண்டுகள்

260 0

கொழும்பு, கொம்பனிவீதி பிரதேசத்தின் யூனியன் பிளேஸிலுள்ள அரச கூட்டுத்தாபனம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேதமடைந்த வாகனம் ஒன்றின் அடிப்பகுதியில் இருந்து இவை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அவ்விடத்திற்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment