ஐ.நா ஆணையாளரின் கருத்துக்கு மூணு வாரங்களில் பதில்

614 19

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்து தொடர்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 அமர்வில், இலங்கை தொடர்பான கருத்துக்களை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.

அவரால் வெளியிடப்பட்ட கருத்துகள் மற்றும் அறிக்கை என்பன இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன் இன்று சபையில் குறிப்பிட்டார்.

அவரது அறிக்கை இலங்கையின் உள் விவகாரத்தில் நேரடியான தலையீடாக அமைந்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பில் இன்னும் 3 வாரங்களில் பதிலளிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

 

Leave a comment