மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதந்கமைய, நாளை காலை 8 மணிமுதல் இந்த அடையாள பணிப் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

