200 மீட்டர் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க வீரர் கேட்லின் தகுதி இழந்தார்

322 0

201608181143212773_Justin-Gatlin-out-in-rio-olympic-200-meter-final_SECVPFரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் அரை இறுதி போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் பந்தய தூரத்தை 20.13 வினாடியில் கடந்து இறுதிபோட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் இன்று காலை ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அரை இறுதி போட்டிக்கள் நடைபெற்றன. 3-வதாக நடந்த அரை இறுதியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் ஓடினார். அவர் பந்தய தூரத்தை 20.13 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார். இதனால் அவர் இறுதிபோட்டி வாய்ப்பை இழந்தார்.

மற்றொரு அரையிறுதியில் அதிவேக வீரரான உசேன் போல்ட் பந்தய தூரத்தை 19.78 வினாடியில் கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

கேட்லின், உசேன் போல்டுக்கு சவால் கொடுக்க கூடிய வீரர் ஆவார். 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் வெள்ளி பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.