நவாஸ் ஷெரீப்புக்கு நோட்டீஸ்

459 0

9262014nawaz-sharif-house400-300பனாமா நாட்டைச் சேர்ந்த பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த சொத்துக்களை அம்பலப்படுத்தியது.

முறைகேடாக பணம் பதுக்கியதால் பிரதமரை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்டவை குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்தது. பிரிட்டன் உள்ளிட்ட இடங்களில் சொத்து வைத்திருந்தது தொடர்பாக பிரதமர் நவாஷ் ஷெரீப் வரும் செப்டம்பர் 6ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் சார்பில் பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.