பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் – அரசாங்கம்!

344 0

நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த ஆறு மாதங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை.

2013ஆம் ஆண்டில் இருந்து, 695 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  சிலர் மீதான குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதையடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment