பொலன்னறுவை சிறைச்சாலில் இருந்து சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
ஒரு வருட காலம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறை கைதி ஒருவரே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைதியை தேடும் நடவடிக்கைள் தற்போது ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

