கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிப்பு

418 0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு குஞ்சுக்குளம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 15 பரல் கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முறியடிக்கப்பட்டது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகண்ன அவர்களின் விசேட மது ஒழிப்பு பிரிவினால் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கோடா 8 லட்சத்து 16 ஆயிரம் மில்லி லீட்டரும், கசிப்பு 42 ஆயிரம் மில்லி லீட்டரும் கைப்பெற்றப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நாளை நீதிமன்ற நடவடிக்கைக்காக முற்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment