சைட்டம் – அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு

2712 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களை புதிதாக உள்வாங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பனவற்றின் பிரதிநிதிகளே எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு தற்காலிக தீர்வையே முன்வைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்வது நேற்றுமுதல் தற்காலிகமாக இடைநிறுத்தியதாக அரசாங்கம் அறிவித்தது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை அல்லது மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டதிட்டங்கள் வர்த்தமாணியில் அறிவிக்கப்படும் இந்தத் தற்காலிகமாக இடைநிறுத்தம்நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment