சர்வதேசத்தின் முன்னால், முன்னாள் போராளிகளும் பொய்யர்கள் என்ற நிலையை உருவாக்க போகிறீர்கள் – டெனீஷ்வரன்

353 0

article_1431523418-unnamed-720x480வடமாகாணசபை, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள், இறுதியில் பிழையாகவே முடியும் என மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் முன்னால் தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் பொய்யர்கள் என்ற நிலையை உருவாக்க போகிறீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாகாண சபையின் 58வது அமர்வின் ஒத்திவைக்கப்பட்ட 2ஆம் அமர்வு நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
என்றும் இல்லாத அளவுக்கு முன்னாள் போராளிகள் மீது பலருக்கும் அக்கறை வந்துள்ளது.
முன்னாள் போராளிகள் தொடர்பான தகவல்கள் எவரிடமாவது உள்ளதா? மேலும் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக மாகாணசபை எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும்.
அதன் பின்னர் சர்வதேசத்தின் முன்னால் தமிழ் மக்களும், முன்னாள் போராளுகளும் பொய்யர்கள் ஆக்கப்படுவர்.
அதற்கு மாகாண சபையே பொறுப்பு என்றார்.
இதற்கு பதிலளித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நல்லிணக்க செயலணி முன்பாக முன்னாள் போராளிகள் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இந்த விடயம் எடுக்கப்பட்டது.
அது சரியாக முடியும், பிழையாக முடியும் என அமைச்சர் கூற முடியாது. என கூறியதுடன் முன்னாள் போராளிகளின் தகவல் என்னிடமும் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.