அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

334 0

Jaffnaயாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்டபடுத்தலாம் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஒத்துக்கொண்டுள்ளார்.
வடமாகாண சபையின் 58வது அமர்வின் ஒத்திவைக்கப்பட்ட 2ஆம் அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக பன்னாட்டு மருத்துவர்களை கேட்கும் நாம் தற்போது யாழ்.குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சபையில் கேட்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மேற்படி மருத்துவ உதவி பொருட்களுடன் வந்த அமெரிக்க விமான படையினருடன் யாழ்.வந்தபோது அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் இந்த விடயத்தை தாம் கேட்டதாகவும் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் முன்னாள் போராளிகள் சிலரை தெரிவு செய்தால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என கூறினார்.