சிரியா மீது ரஷ்யா தாக்குதல்

482 0

russia_002ஈரானை தளமாக கொண்டு ரஷ்யா, சிரியா மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
சிரியா மீதான தாக்குதல்களை துரிதப்படுத்தும் நோக்கில், ரஷ்யா ஈரானிலும் தமது வான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது..
எலப்போ, இட்லிப் உள்ளிட்ட மூன்று மாகாணங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் சம்பவத்தில் 27 பேர் வரை பலியானதாக உள்ளூர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
டுபோலெவ் 22எம்3 மற்றும் சுகோய் 34 என்ற ஜெட் ரக உலங்கு வானுர்திகள் தாக்குதல்களை நடத்தி இருக்கின்றன.
ஈரானில் இருந்து ரஷ்யா மேற்கொள்ளும் முதல் வான் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.