விபத்துக்களில் 1000க்கும் மேற்பட்டோர் பலி

344 0

30-1464590783-accident45611கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆயிரத்து 632 பேர் பலியாகினர்.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது.
இதில் 646 பேர் உந்துருளி விபத்துக்களினால் பலியானவர்கள் என அந்த சபை தெரிவித்துள்ளது.
இதுதவிர, வாகன விபத்து காரணமாக நடைபாதையில் பயணித்த 459 பேரும் பலியாகினர்.
வாகன விபத்துக்களால் 246 பயணிகளும், 137 சாரதிகளும் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
வீதியில் பயணிக்கும் போது, சாரதிகள் மாத்திரமின்றி அனைவரும் அவதானத்துடன் செயற்படும் பட்சத்தில் பெரும்பலான விபத்துக்களை தவிர்த்து கொள்ள முடியும் என காவற்துறை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.