சரத் பொன்சேகவுக்கு எதிராக அநுராதப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

18422 108

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகவுக்கு எதிராக அநுராதப்புர நகரத்தல் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.சிறப்பு தேவையுடைய இராணுவத்தினராலேயே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரனின் தேவைக்கேற்ற வகையிலேயே, பீல்ட் மார்ஷலும் அமைச்சருமான சரத் பொன்சேகா கருத்து வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தாம் 20 வருடங்கள் அரச தொழிலில் ஈடுப்பட்டிருந்த நிலையில், இவ்வாறானவர்களை சந்தித்ததில்லை என குறிப்பிட்டார்.

இதனை எண்ணி தாம் தலைகுனிவதாக தெரிவித்த அவர்; இவ்வாறான விடயங்களை நிர்பந்திக்க வேண்டும் எனவும் மக்கள் கோருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment