‘ஏர்மா’ சூறாவளி புளோரிடா மாநிலத்தின் தெற்கேவுள்ள தீவுகளை தாக்கியுள்ளது

29286 0

எதிர்பார்த்ததுக்கு அமைய ‘ஏர்மா’ சூறாவளி புளோரிடா மாநிலத்தின் தெற்கேவுள்ள தீவுகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 130 மைல் வேகத்தில் இந்த சூறாவளி வீசுவதுடன் புளோரிடாவின் மேற்கு குடாகரையை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

63 லட்சம் மக்களை இந்த பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

கரிபியன் பிரதேசத்தை இந்த சூறாவளி கடந்து வந்த போது 25 பேர் வரையில் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துளனர்.

எதிர்வரும் 2 மணி நேரத்தில் சூறாவளியின் வேகம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி தாக்கத்தினால் புளோரிடாவில் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment