மத்தள சர்வதேச வானுர்தித்தளத்தில் இராணுவ செயற்பாட்டிற்கும் இடமில்லை

226 0

மத்தள சர்வதேச வானுர்தித்தளத்தில் எந்த இராணுவ செயற்பாட்டிற்கும் இடமளிக்கப்படப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது வானுர்திப் போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மத்தள வானுர்தித் தளத்தை இந்தியாவிற்கு கையளிப்பது தொடர்பிலான உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் முக்கிய இரண்டு உடன்படிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்படவுள்ளது.

மத்தள வானுர்த்தித் தளத்தின் சில முக்கிய கட்டுப்பாட்டு பணிகள் இலங்கையினாலேயே மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment