சலாவ இராணுவ முகாமுக்கு அருகே மீண்டும் வெடிப்பு

355 0

army-camo-fireசலாவ மற்றும் கொஸ்கம ஆயுதக் களஞ்சியச்சாலை வெடித்துச் சிதறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சலாவ ஆயுதக்களஞ்சியசாலைக்கு அருகிலிருந்த வீட்டுத்தோட்டமொன்றில் மீண்டும் வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த வீட்டுத் தோட்டத்தில் துப்புரவுப் பணி நடைபெறும் போது சலாவ வெடிவிபத்தின்போது மண்ணுள் புதையுண்டிருந்த வெடிகுண்டொன்று வெடித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி உருவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த வீட்டுத்தோட்டத்தில் நடமாடுவதற்கு பயமாக உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கில் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் நட்டம் ஏற்பட்டதுடன் பல வீடுகள் சேதமடைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.